கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள நபரொருவருக்கு அனுப்பப்பட்ட 3 மரப் பெட்டிகளில் 16 கிலோ கிராம் குஷ் ரக போதைப் பொருளும், 1 கிலோ ஐஸ் வகை போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
சூட்சுமமாக அமைக்கப்பட்ட போலி அடிச் சட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சுங்கத் திணைக்கள பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
பேலியகொடயில் உள்ள பொதிகளை சோதித்து வெளியேற்றும் தொகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த போதைப் பொருட்களின் தெரு மதிப்பு ரூ. 122 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment