உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்ட ரீதியானதே ! எம்.பி பதவியை இழக்கிறார் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Friday, October 6, 2023

உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்ட ரீதியானதே ! எம்.பி பதவியை இழக்கிறார் நஸீர் அஹமட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று (06) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் நஸீர் அஹமட், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டார்.

இந்த நீக்கலுக்கு எதிராக அமைச்சர் நஸீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் அக்கட்சியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த வழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

thamilan.lk  

No comments:

Post a Comment