(எம்.வை.எம்.சியாம்)
சாதாரண மக்களுக்கு சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். சுகாதார துறையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு முக்கிய பொறுப்புள்ளது. கட்டாயமாக ஜனாதிபதியின் தலையிடு இதற்கு அவசியமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.
சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தெளிவுபடுத்தும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்றையதினம் (23) கொழும்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டதாவது, வரலாற்றில் ஊழல் யுகமொன்று சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள நிலையில் உடல் முழுவதும் புற்றுநோய் பரவி வாய் மூலமாக மருந்து செலுத்தி, ஊசிகளை செலுத்தி குணப்படுத்த முடியாத நிலை போன்று இன்று நாம் வீதியில் இறங்கியுள்ளோம்.
சாதாரண மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்களை விநியோக்கின்றறோம். சுகாதாரத்துறையை மீட்டெடுக்க ஜனாதிபதிக்கு முக்கிய பொறுப்புள்ளது. கட்டாயமாக ஜனாதிபதியின் தலையிடு இதற்கு அவசியமாகும் என்றார்.
இதேவேளை போக்குவரத்து கொடுப்பனவுகளை அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரப் பரிசோதகர்கள் நாடளாவிய ரீதியில் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
நாடளாவிய ரீதியில் 2400 அதிகாரிகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ். போபிட்டிய தெரிவித்துள்ளார்.
தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment