மதுபானசாலைகளுக்கு காலக்கெடு விதிப்பு ! - News View

About Us

About Us

Breaking

Thursday, October 12, 2023

மதுபானசாலைகளுக்கு காலக்கெடு விதிப்பு !

மொத்த வரி நிலுவைத் தொகையை செலுத்தாமல், போலி ஸ்டிக்கர்களை ஒட்டி மதுபான விற்பனையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்யப்படுமென மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி நிலுவையை செலுத்துவதற்கு இம்மாதம் (30) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தில் பொதுக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய வரிகளை குறிப்பிட்ட நேரத்தில் அறவிடவில்லையென தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்ததையடுத்து, மதுபான சாலைகளின் நிலுவைத் தொகை கணக்கெடுப்புக்கள் எடுக்கப்பட்டன.

இதன்படி, மொத்த நிலுவைத் தொகை 6.2 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2.5 பில்லியன் ரூபாய் வரி நிலுவைத் தொகையாக கணக்கிடப்பட்டுள்ளது. எஞ்சிய 3.8 பில்லியன் ரூபா தாமதக் கட்டணமாக இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment