சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 4, 2023

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு விலை​ 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ கிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, Laugfs எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ கிராம் Laugfs எரிவாயு விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3985 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1595 ரூபாவாகும்.

No comments:

Post a Comment