A/L பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு : 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 4, 2023

A/L பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு : 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான (2023 கல்வியாண்டு) புதிய திகதிகள் புதன்கிழமை (4) இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய எதிர்வரும் 2024 ஜனவரி 04 முதல் ஜனவரி 31 வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்குரிய மாற்றம் செய்யப்பட்ட நேர அட்டவணை எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு எதிர்பார்த்து ஆனால் இதுவரையில் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரிகள் இருப்பின் அவ்விண்ணப்பதாரிகள் மட்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 06 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11.59 மணிவரை ஒன்லைன் முறைமையில் இதற்காக விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk ஊடாகவோ அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாகவோ பிரவேசித்து online முறைமையில் விண்ணப்பிக்க முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 1911 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கோ, 011 2784208 அல்லது 011 2784537 அல்லது 011 2786616 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ அழைப்பினை மேற்கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கடந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதையடுத்து இந்த திகதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகளும் இதனால் தாமதமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment