கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் 09 இல் கல்வி கற்கும் மாணவன் ஏ.எப். அப்னான் 1000 க்கு 1000 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
30.09.2023ஆம் சனிக்கிழமை கொழும்பு Stam Campus இல் நடைபெற்ற Coding & Robotics போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு Stam Campus ற்கும் தெரிவாகியுள்ளார்.
250 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Robotic & Coding கற்கையில் பிரசித்தி பெற்ற ஆசிரியர் மூலம் வழிகாட்டப்பட்டு இவ்வாறான முயற்சியின் மூலம் தாமும் தம் ஊரும் தொழிநுட்ப ரீதியில் முன்னேற வேண்டுமென்று இரவு பகலாக அயராதுழைத்து இவ்வடைவினைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்கான சர்வதேச விருது எதிர்வரும் 10.10.2023ஆம் திகதி Stem Campus இல் நடைபெறவுள்ளது.
சாதனை மாணவனுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment