திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள் : நிதியமைச்சின் செயலருக்கும் உயிரச்சுறுத்தல் என்கிறார் ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 3, 2023

திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள் : நிதியமைச்சின் செயலருக்கும் உயிரச்சுறுத்தல் என்கிறார் ஹர்ஷ டி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நிதி அமைச்சின் செயலாளருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கதைக்கும்போது நிதி அமைச்சின் செயலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது குடும்பத்தினர் தொடர்பிலும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

விடுக்கப்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அறிவிப்பதாக நிதியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தல்கள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளரே கூறுகிறார். பிறிதொருவர் குறிப்பிடவில்லை. ஆகவே திரைக்கு பின்னால் நடக்கும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.

No comments:

Post a Comment