வாகரையில் கரையொதுங்கிய டொல்பின் வகை மீன்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 25, 2023

வாகரையில் கரையொதுங்கிய டொல்பின் வகை மீன்கள்

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் டொல்பின் வகை மீன்கள் சில கரையொதிங்கியிருந்தன.

இன்று (25) காலை வழக்கத்திற்கு மாறாக இவ்வகை மீன்கள் ஆழ் கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி வந்திருந்ததாகவும் அவற்றினை மீண்டும் கடலில் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வாகரை பிரதேச செயலாளர் டி.அருணன் தெரிவித்தார்.

இதற்காக கடற்றொழில் திணைக்களம், கஜீவத்தை கடற்படையினர், நாரா, கிரான், அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மீனவ சங்கங்கள் இணைந்து அவற்றினை பாதுகாப்பாக கடலில் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது காயப்பட்ட டொல்பின்களுக்கு ஊசி மூலம் மருந்தேற்றப்பட்டு பாதுகாப்பாக சுமார் 1 கிலோ மீற்றருக்கு அப்பால் கடலில் விடப்பட்டது.

கடலில் ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்த நிலையில் அவை கரையொதிங்கியிருக்கலாம் என அங்கு வருகை தந்த அதிகாரிகளினால் ஊகம் தெரிவிக்கப்பட்டது.

பாசிக்குடா நிருபர்

No comments:

Post a Comment