மாத்தறையில் 12 மணித்தியால நீர் விநியோகத் தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 25, 2023

மாத்தறையில் 12 மணித்தியால நீர் விநியோகத் தடை

மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தில் அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக நாளை (26) மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 9.30 வரையிலான 12 மணி நேர நீர் விநியோகத் தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

தெவிநுவர நகரம், பட்டியஹேன, தலல்ல, கந்தரை, ஜயபோதிய, கப்புகம, கந்தஹேன, அத்கஹவத்த மற்றும் வேலேகொட ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

பேருவளை பி.எம். முக்தார்

No comments:

Post a Comment