கோவில் காணி கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு : விசாரணைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 13, 2023

கோவில் காணி கிணற்றில் ஆயுதங்கள் மீட்பு : விசாரணைகள் ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில் காணி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கிணறு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றையதினம் வியாழக்கிழமை (12) குறித்த கிணற்றை துப்பரவு செய்தபோது இவ்வாறு அதிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது, LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, ரி 56 ரக துப்பாக்கி ரவை மெகசின்கள் இரண்டு, 261 தோட்டாக்கள், 0.22 துப்பாக்கிக்குரிய வெற்று தோட்டாக்கள் 46 அதற்குரிய தோட்டாக்கள் 3, எம் 16 துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 11, சுடர் துப்பாக்கி (Flare Gun) ஒன்று என்பன மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment