முன்னைய மாதங்களுடன் ஒப்பிடும்போது கடந்த மாதத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் மழை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
தொற்று நோயியல் பிரிவின் சமீபத்திய தரவுகளில், 2,605 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் இருந்து ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை மொத்தமாக 64,816 டெங்கு நோயாளர்களும் 38 இறப்புகளும் பதிவாகியுள்ளன.
மேலும், டெங்கு பரவும் இடங்கள் அதிகமாக உள்ள பகுதிகளின் எண்ணிக்கை ஏழாக மட்டுமே குறைந்துள்ளது.
நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் இனப் பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றி சூழலை சுத்தம் செய்யவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஆனால் தற்போது தொடரும் மழைக் காலங்களுக்கு மத்தியில் டெங்கு நோய் மேலும் அச்சுறுத்தலாகவே உள்ளது.
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு உள்ளுர் அதிகாரிகளும் சுகாதார நிறுவனங்களும் தொடர்ந்து அயராது உழைத்து வருவதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி கூறினார்.
தொடரும் மழைக் காலங்களுக்கு மத்தியில் டெங்கு நோய் மேலும் அச்சுறுத்தலாகவே உள்ளது. பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி ஆகியவை டெங்கு நோய்க்கு எதிரான முக்கிய உத்திகளாக உள்ளன என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment