கொள்கலனுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 5, 2023

கொள்கலனுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயம்

கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் பட்டலிய கஜு புரவில் இன்று (06) அதிகாலை தனியார் பயணிகள் பஸ் ஒன்று பாரவூர்தி மற்றும் பவுசருடன் மோதியதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயணிகள் பஸ் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோதே முன்னால் வந்த பாரவூர்தியுடன் மோதியதுடன் பின்னால் வந்த பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த பயணிகள் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment