துருக்கிய ஏர்லைன்ஸ் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்ததுடன், முதலாவது விமானம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
துருக்கிய விமான சேவை பத்து வருடங்களின் பின்னர் இலங்கைக்கான நேரடி விமான சேவையை இன்று திங்கட்கிழமை (30) ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் வாராம் தோறும் 4 விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி துருக்கியின் இஸ்தான்பூலில் இருந்து துருக்கி விமான சேவையின் முதல் விமானமான TK-730 இன்று (30) காலை 05.40 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் இருந்து 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் மீண்டும் துருக்கி-இஸ்தான்புல் நோக்கி 209 பயணிகள் சென்றுள்ளனர்.
முதலாவது நேரடி விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது. இலங்கை தேயிலை சபையின் அனுசரணையுடன் உலகின் தலைசிறந்த தேயிலைக்கு இணையான சிலோன் தேநீர் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், சுமார் 10 வருடங்களாக துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது விமான சேவைகளை நடத்தி வருவதாகவும் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் துருக்கியிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment