ஜனாதிபதியை சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் : 08 விடயங்களை உள்ளடக்கிய ஆலோசனைகளும் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 13, 2023

ஜனாதிபதியை சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் : 08 விடயங்களை உள்ளடக்கிய ஆலோசனைகளும் கையளிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, புத்தி ஜீவிகள் வெளியேற்றம் சுகாதார பிரச்சினைகள் உள்ளிட்ட வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் 08 விடயங்களை உள்ளடக்கிய ஆலோசனைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தப் பரிந்துரைகளை கையேற்றதுடன், உரிய பரிசீலனைக்கு உட்படுத்துவதாகவும் குறிப்பிட்டதோடு, சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் மீண்டும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரைச் சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. ஆர்.எச். எஸ் சமரதுங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திஸாநாயக்க, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் மிமி தென்னகோன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திளர். ஹரித அலுத்கே, உப தலைவர் வைத்தியர். சந்திக எபிகடுவ மற்றும் சங்கத்தின் உதவி செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் இச்சந்த்திப்பில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment