எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (01) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை நிலவிய நிலையில் எரிபொருள் விநியோக வசதிக்காக QR முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.
அந்த QR திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று அறிவித்தமைக்கிணங்க, இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR முறை பின்பற்றப்படாது.
No comments:
Post a Comment