சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரி, அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள கடிதத்தை செயற்படுத்துவதை தடுக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ள உத்தரவை, இடைநிறுத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் பின்னரே, எதிர்வரும் ஒக்டோபர் 05ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிபதி சதுன் விதான கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த தடையுத்தரவை பிறப்பித்திருந்தார்.
அதேவேளை, தயாசிறி ஜயசேகரவுக்கு இதுபோன்ற கடிதமொன்றை வழங்குவதற்கு கட்சியின் மத்திய குழுவுக்கு அதிகாரம் உள்ளது என பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தினார்.
முறைப்பாட்டாளர் உண்மையை மறைத்து இந்த தடையுத்தரவை பெற்றுள்ளதாகவும் இந்த தடையுத்தரவை இடைநிறுத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறும் பைசர் முஸ்தபா நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment