பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் : வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் : வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கெடுப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்றும் (06) நாளையும் ஆகிய இரு தினங்களிலும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 4.30 மணிரையும் இவ்விவாதத்தை நடத்துவதற்கு நேற்று (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அதேநேரம், முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நாளைமறுதினம் (08) வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு பி.ப. 5.30 மணிக்கு அது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

உண்ணாட்டரசிறை (திருத்த) மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத் தொகை அறவீடு (திருத்த) சட்டமூலங்களின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை இன்று (06) மற்றும் நாளை (07) ஆகிய தினங்களில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று (06) பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 7.30 வரையும், நாளை (07) பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 7.00 மணி வரையும் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படும்.

இந்த இரு சட்டமூலங்கள் குறித்த இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நாளை (07) வியாழக்கிழமை பி.ப. 7.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு சட்டமூலங்களும் குழுநிலையில் ஆராய்ந்து மூன்றாவது மதிப்பீட்டை பி.ப. 7.30 மணி வரை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், இந்த இரு தினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்த வாய் மூல விடைக்கான கேள்விகளை பிறிதொரு தினத்துக்கு ஆற்றுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இந்த இரு தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணிரையும் நடத்துவதற்கும் இணங்கப்பட்டது.

No comments:

Post a Comment