ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
தாம் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பான கடிதம் நேற்று (05) இரவு தமக்கு கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையொன்றும் நடத்தப்படவுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி ஒழுக்காற்று மீறல் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை அனுப்பி வைக்கப்படும் என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமைக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதற்கமைய, குறித்த வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிச் செயலாளராக கடமையாற்றி வந்த சரத் ஏக்கநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment