உடனடியாக இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில், புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
சற்று முன்னர் வெளியிட்டுள்ள குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலானது, அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய,
1. பயணிகளுக்கும் பண்டங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் மற்றும் பண்டங்களும்
2. புகையிரத பாதைகள் மூலமான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை ஏற்பாடு செய்தலும் பேணுதலும் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத எஞ்ஜின் சாரதிகள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமான புகையிரத சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இயங்கிய ஏனைய போகிற இடங்கள் அதிகளவான பயணிகளுடன் தாமதமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புகையிரதத்தில் சன நெரிசல் காரணமாக அதன் மேல் கூரையின் மீது ஏறி பயணித்த 18 வயது மாணவன் ஒருவர் அதிலிருந்து வீழ்ந்து மரணித்திருந்தார்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து ரம்புக்கணை நோக்கி பயணித்த அதிக நெரிசலுடனான புகையிரதத்தில் பயணித்த பயணி ஒருவர் அதிலிருந்து வீழ்ந்து படுகாயம் அடைந்துள்ளார்.
புளுகஹகொட பகுதியில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment