இசை நிகழ்ச்சியில் மோதல் : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Friday, September 8, 2023

இசை நிகழ்ச்சியில் மோதல் : ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 05 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மோதலின்போது 42, 40 மற்றும் 19, 23 வயதுடையவர்களே இவ்வாறு காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோமரங்கடவல திரியாய் சந்தியில் உள்ள விகாரையொன்றில் இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மொறவெவ - மயிலகுடாவ பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 05 பேர் காயமடைந்த நிலையில் நான்கு பேர் மஹதிவுல்வெவ மற்றும் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த மோதலில் காயமடைந்த 19 வயதுடைய யுவதி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோதல் தொடர்பில் விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment