தமிழ் திரையுலகில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்.
57 வயதான இவர் இன்று (8) காலை 8.30 மணியளவில் வளசரவாக்கத்தில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஜினியின் ‘ஜெயிலர்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள மாரிமுத்துவின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை கிராமத்தைச் சேர்ந்த அவர், இயக்குனர் வஸந்திடம் உதவியாளராக பணியாற்றியதோடு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.
பரியேறும் பெருமாள், ஜெயிலர், யுத்தம் செய், கொம்பன் உள்ளிட்ட சுமார் 50 படங்களில் நடித்துள்ள அவர், எதிர்நீச்சல் தொடர் தமிழ் நாட்டின் இல்லங்களில் அதிகம் அறியப்பட்டவரானார்.
பரியேறும் பெருமாள், விக்ரம், ஜெயிலர் என பல வெற்றி படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment