ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணைக் காலப்பகுதியில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் உறுதிப்படுத்தப்படாமையினால் அவரை பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதவான் இதன்போது மன்றிற்கு அறிவித்தார்.
அத்துடன், சச்சித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம் அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்க ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 06ஆம் திகதி விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment