கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 25, 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான அனுமதி கையொப்பமிடப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொதுசேவை ஆணைக்குழுவிடம் இன்று கையொப்பம் இடப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவும், கல்வித் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment