12 துளை துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 40 தோட்டாக்களை விற்பனை செய்வதற்கு கொண்டு சென்ற இரு சந்தேகநபர்களை எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எப்பாவல மற்றும் ராகம பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
அவர்கள் இருவரும் கொழும்பில் கூலித் தொழில் செய்து ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருபவர்கள் எனவும், அதில் ஒருவரான ராகம பகுதியைச் சேர்ந்த நபரிடம் 12 துளை வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தோட்டாக்கள் இருப்பதாகவும் அதனை விற்பனை செய்து தருமாறு எப்பாவல கல்லேவ பகுதியைச் சேர்ந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.
எப்பாவல, அழுத்வெவ மற்றும் கல்லேவ போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதுடன் காட்டு மிருகங்களை வேட்டையாடும் நபர்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதனாலும் அவைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவித்து அவைகளை கொண்டு வருமாறு எப்பாவல நபர் தெரிவித்துள்ளார்.
அதனூடாக நேற்றுமுன்தினம் (10) மாலை ராகமவில் இருந்து எப்பாவல கல்லேவ பகுதியில் அமைந்துள்ள நண்பரின் வீட்டுக்கு வந்துள்ளார்.
தோட்டாக்களை விற்பனை செய்வதற்காக இரு சந்தேகநபர்களும் அழுத்வெவ குள கட்டு ஊடாக சென்று கொண்டிருந்த நிலையில் எப்பாவல பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் கொண்டு சென்ற பையை சோதனைக்கு உட்படுத்தியபோது 40 தோட்டாக்களை கண்டு பிடித்துள்ளனர். அவைகள் ஹங்கேரியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டது என பொலிசார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நிருபர்
No comments:
Post a Comment