கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இலங்கைக்கு இந்த வைரசினால் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிபா வைரஸ் புதியதல்ல 1998 இல் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என தலைமை தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அந்த வைரஸ் பெருமளவில் பரவவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மலேசியாவில் பரவத் தொடங்கிய பின்னர் 2001 முதல் 2013 முதல் பிலிப்பைன்ஸ், பங்களாதேஸ், இந்தியா போன்ற நாடுகளில் இந்த வைரஸ் பரவியது எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய பரவல் குறித்து இலங்கை உன்னிப்பாக அவதானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment