இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெண் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு தொடர்பில் சிட்னி நீதிமன்றத்தில் அடுத்த வாரம் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.
வரும் திங்கட்கிழமை (18) நீதிபதி ஒருவரை மாத்திரம் கொண்ட வழக்கு விசாரணையை 32 வயதான குணதிலக்க எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் அவரது வழக்கறிஞர் நேற்று (14) டவ்னிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தின் முன் தோன்றினார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை மூன்று தொடக்கம் நான்கு நாட்கள் வரை நீடிக்கும் என்றும் சிங்கள உரை பெயர்ப்பாளர் ஒருவர் உதவிக்கு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
டேடிங் செயலி ஒன்றின் மூலம் தொடர்பை ஏற்படுத்திய குணதிலக்க கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி அந்தப் பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.
டி20 உலகக் கிண்ணப் போட்டிக்காக இலங்கை அணி அவுஸ்திரேலியா சென்றிருந்தபோதே இந்த சம்பவம் நடந்தது.
குணத்திலக்க விரைவாக நாடு திரும்பவும் தனது கிரிக்கெட் வாழ்வை தொடரவும் சாத்தியம் கொண்டதாக இந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்த நீதிமன்றம் முன்னதாக ஒப்புதல் அளித்திருந்தது.
No comments:
Post a Comment