முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அவரது பிணை கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்ட லங்கா பிரீமியர் லீக் T20 தொடரில் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இருவரை, வேறொரு தரப்பின் தேவைக்காக தூண்டிவிடுவதற்கு முயற்சித்தமை மற்றும் அழுத்தம் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சசித்ர சேனாநாயக்க மீது சுமத்தப்பட்டுள்ளன.
விளையாட்டுக் குற்றங்கள் தொடர்பான பிரிவினால் கடந்த 06 ஆம் திகதி சச்சித்ர சேனாநாயக்க கைது செய்யப்பட்டதுடன், அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment