அதிகாலையில் பஸ் வண்டி மீது தாக்குதல்; நடத்துனர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 24, 2023

அதிகாலையில் பஸ் வண்டி மீது தாக்குதல்; நடத்துனர் காயம்

வாழைச்சேனையிலிருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டி மீது இன்று (25) அதிகாலை 5.10 மணியளவில் மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் 18ம் கட்டைப்பகுதியில் இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பஸ் வண்டியின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

பஸ் வண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை சென்று அக்கறைப்பற்றுக்குச் செல்வதன் காரணமாக வழமையாக தமது வைத்தியத் தேவைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் செல்லும் கூடுதலான நோயாளிகளும், நோயாளிகளைப் பார்வையிடுவோரும், பல்கலைக்கழக மாணவர்கள், அரச, தனியார் அலுவலர்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்காகச் செல்வோரும் பயணிப்பது வழக்கமாகும்.

இம்முறைக்கேடான தாக்குதலால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு அதிகாலை வேளையில் பயணம் செய்த பிரயாணிகள் பெரிதும் அசெளகரியத்தை எதிர்கொண்டனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

கல்குடா நிருபர்

No comments:

Post a Comment