சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இந்த வருடத்தின் (2023) ஓகஸ்ட் மாதம் வரை 5,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இதில் 242 முறைப்பாடுகள், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவையெனத் தெரிவித்தது.
1,296 முறைப்பாடுகள், சிறுவர்கள் இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்டமை தொடர்பானவையெனத் தெரிவித்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, 163 பாரதூரமான காயங்கள் தொடர்பான முறைப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தது.
சிறுவர்களை யாசகம் பெறுவதற்காக பயன்படுத்துவது தொடர்பாக 196 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இணைய பாதுகாப்பு தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அச்சபை தெரிவித்தது.
சமூக ஊடகங்கள் இணைய வெளியில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 110 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்தது.
No comments:
Post a Comment