நிகழ்வுகளில் மகனும் கலந்துகொண்டது ஏன்? விளக்கமளித்துள்ள அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Saturday, September 23, 2023

நிகழ்வுகளில் மகனும் கலந்துகொண்டது ஏன்? விளக்கமளித்துள்ள அமைச்சர் அலி சப்ரி

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் நிகழ்வுக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ள தனக்கு தனது பணிச்சுமையை குறைப்பதற்காக தனது மகன் உதவினார் அதன் காரணமாக தன்னுடன் சில நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் அவரது மகனும் காணப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக இடம்பெற்ற சந்திப்புகளில் என்னுடன் எனது மகன் கலந்துகொண்டது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான கரிசனைகளை பார்த்தேன். நான் உண்மைகளை உங்கள் முன்முன்வைக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதியின் உயர்மட்ட தூதுக்குழுவிற்கு உதவுவதற்கு அப்பால் வெளிவிவகார அமைச்சர் என்ற அடிப்படையில் வொசிங்டன் ஐநாவிற்கான விஜயத்தின்போது நான் பல சந்திப்புகளில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டது.

எனது பயண ஏற்பாடுகளில் பத்து உரைகள், மூன்று பொது நிகழ்வுகள், பல இரு தரப்பு பல தரப்பு நிகழ்வுகள் சந்திப்புகள் போன்றவை காணப்பட்டன. மிக அதிகமான பணிச்சுமை காரணமாக பெருமளவிற்கு ஆராய வேண்டிய எழுத வேண்டிய துல்லியமாக தயார்படுத்த வேண்டிய அவசியம் காணப்பட்டது.

அமைச்சர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற உதவுவதற்காக ஒவ்வொருவரும் அமைச்சரவை பணியகத்தின் மூலம் நன்மையடைவோம் இதில் தொண்டர்களும் பணம் பெற்றுக் கொண்டு பணியாற்றுபவர்களும் காணப்படுவார்கள்.

எனது மகன் நான் வேண்டுகோள் விடுத்ததன் அடிப்படையில் ஆராய்ச்சி உதவியாளராகவும் நகல் எழுத்தாளராகவும் எனது மகன் உதவினார்.

அமெரிக்காவில் அவர் தற்போது கல்வி கற்று வருபவர் என்பதால் அவர் தனது நேரம் நிபுணத்துவத்தை ஒதுக்குவதற்கு முன்வந்தார்.

முக்கிய சந்திப்புகள் நிகழ்வுகளில் எனக்கு அவரது ஆதரவு பெரும் உதவியாக அமைந்தது என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமோ, வெளிவிவகார அமைச்சோ ஒரு சதம் கூட செலவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment