சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 73 பேரும், எதிராக 113 பேரும் வாக்களித்துள்ளனர்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் நேற்றுமுன்தினம் (06) மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களிலும் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 4.30 மணிரையும் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று (08) வெள்ளிக்கிழமையும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு பி.ப. 5.30 மணிக்கு அது குறித்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
குறித்த வாக்கெடுப்பிற்கு அமைய, குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து (SLPP) எதிர்க்கட்சிக்கு சென்றுள்ள எம்.பிக்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் உள்ளிட்டோர் வாக்களித்திருந்தனர்.
அரசாங்கத்தின் பெரும்பான்மையாகவுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பிக்கள், ஐ.தே.க வின் ஒரு எம்.பி. மற்றும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வரும் எம்.பிக்கள், ஆளும் கட்சிக்கு ஆதரவாகவுள்ள கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் உள்ளிட்டோர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment