தபால் நிலையங்களுக்கு கணினிகள், UPS, பார்கோடு ரீடர்கள் மற்றும் பிரிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 1,000 தபால் நிலையங்களுக்கு உயர் தொழினுட்ப உபகரணங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
தற்போதுள்ள பொருளாதார நிலைமையின் கீழ் அரச பொருளாதாரத்தை வலுப்படுத்த இது ஒரு படியாக அமையு மென வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
யுனிவர்சல் தபால் தொழிற்சங்க நிதியத்தின் அனுசரணையின் கீழ், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில், இராஜாங்க அமைச்சர் சாந்தாவின் பங்கேற்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ. எம்.ஆர்.பி.சத்குமார, பிரதி தபால்மா அதிபர் டி.ஏ.ஆர்.கே. ராஜசிங்க, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட மற்றும் தபால் நிலையங்களின் அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
இத்தொழினுட்ப உபகரணங்கள் 653 தபால் நிலையங்கள், 300 துணை தபால் நிலையங்கள், 27 அஞ்சல் வரிசைப்படுத்தும் மையங்கள் மற்றும் 20 மத்திய அஞ்சல் பரிமாற்றங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment