இலங்கைக்கு வந்த தபால் பொதிகளில் கஞ்சா - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

இலங்கைக்கு வந்த தபால் பொதிகளில் கஞ்சா

கொழும்பு தபால் மதிப்பீட்டு பிரிவின் சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இலங்கைக்கு தபால் மூலம் வந்து உரிய உரிமையாளர்களால் நீண்ட நாட்களாக எடுத்துச் செல்லப்படாதிருந்த பொதிகளில் கஞ்சா மற்றும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தபால் திணைக்களம், சுங்கப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இப்பொதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப் பொருளின் அளவு 1046 கிராம் எனவும் அவற்றின் பெறுமதி 14,085,000 ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது

இந்த பொதிகள் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ளவர்களின் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அவை அமெரிக்கா, கனடா, மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. 

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொதிகள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. 

இவ்வருடத்தில் கொழும்புத் தபால் மதிப்பீட்டு காரியாலயத்தால் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 86 மில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது.

No comments:

Post a Comment