20 மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

20 மணி நேரம் மீட்பு பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள்

திறப்பனை பொலிஸ் பகுதிக்குட்பட்ட வெள்ளமுதாவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்திருந்த காட்டு யானை ஒன்றை 20 மணி நேரத்திற்கு பின்னர் நேற்று (05) மாலை 05.00 மணியளவில் மீட்டுள்ளனர்.

திறப்பனை வெள்ளமுதாவ பகுதியில் வீட்டுத் தோட்ட விவசாய கிணறு ஒன்றில் நேற்றுமுன்தினம் (04) இரவு 08.00 மணியளவில் குறித்த யானை விழுந்திருந்த நிலையில் அது தொடர்பில் தோட்ட உரிமையாளர் வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளார்.

தகவலறிந்து உடனடியாக செயல்பட்ட வனவிலங்கு அதிகாரிகள் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இருந்த போதும் விவசாய கிணறு சுமார் 30 அடி ஆழமாக இருந்ததனால் நேற்று (05) மாலை 05.00 மணியளவில் பெகோ இயந்திரத்தினை பயன்படுத்தி காட்டு யானையை மீட்டு வனப் பகுதியில் விட்டுள்ளதாக வனவிலங்கு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment