நாட்டில் தற்போதுள்ள அரசியல் முறைமையினால்தான் என்மீது துப்பாக்கி பிரயோகம் - உத்திக பிரேமரத்ன - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 19, 2023

நாட்டில் தற்போதுள்ள அரசியல் முறைமையினால்தான் என்மீது துப்பாக்கி பிரயோகம் - உத்திக பிரேமரத்ன

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் தற்போதுள்ள அரசியல் முறைமையினால்தான் என்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தாதவரை இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது என உத்திக பிரேமரத்ன தெரிவித்தார்.

தன்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், என்மீது கடந்த 17ஆம் திகதி இரவு மர்ம நபர்கள் சிலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தை யார் செய்தார்கள் என்பதை விட, தற்போதுள்ள முறைமையினால்தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று நான் நினைக்கிறேன், இந்த முறைமை தவறு என்று நாம் அனைவரும் அறிவோம், இந்த முறைமை தவறு என்பது நம் நாட்டு மக்களுக்கும் தெரியும்.

அத்துடன் நமது நாட்டின் சமூக அமைப்பு தவறாக உள்ளது. அரசியலும் தவறாக உள்ளது. அதனால்தான் நாடு இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது. அதனால் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதாக இருந்தால் எமது முறைமையை மாற்ற வேண்டும். முறைமாற்றம் ஏற்படுத்தாமல் ஒருபோதும் இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உத்திக பிரேமரத்ன எம்.பி.யின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.பி.க்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு உத்திக பிரேமரட்ன எம்.பி.யின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பு சம்பந்தப்பட்ட எம்.பி.யின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தாக்குதல் குறித்து விரைந்து விசாரணை நடத்தி சந்தேக நபர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment