மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமை செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
அத்துடன், செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை மேலதிக அபராதம் செலுத்தாமல் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கே.சி.என். பெரேரா விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தினால் குறித்த கணனிக் கட்டமைப்பு நிர்வகிக்கப்படும் நிலையில் அதன் புதுப்பிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு சேவை இடைநிறுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, www.motortraffic.wp.gov.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஒன்லைன் மூலமான வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் பெறுவது நேற்று நள்ளிரவு (24) முதல் ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment