கொலையாளி பாராளுமன்றத்தில் இருக்கின்றாரா? : கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 6, 2023

கொலையாளி பாராளுமன்றத்தில் இருக்கின்றாரா? : கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலையாளி பாராளுமன்றத்தில் இருக்கின்றாரா? இது தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) விசேட கூற்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் பயணத்தில் மிகவும் பக்க பலமாக இருந்தவரே லசந்த விக்கிரமதுங்க, இதனால் ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் யார்? இந்த கொலையுடன் தொடர்புடையவர்களை இந்த அரசாங்கம் வெளிப்படுத்தாதா? லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்த கொலைகாரர் இந்த சபையில் இருக்கின்றாரா? இதனை கேட்பதற்கு நான் அஞ்ச மாட்டேன். இதற்கு பதிலளியுங்கள். ஒவ்வொரு குழுக்கள், ஆயுதக் குழுக்களுக்கு நாங்கள் பயமில்லை என்றார்.

No comments:

Post a Comment