ரயில் பயணச்சீட்டு சோதனையை அதிகரிக்க அவசர நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, September 28, 2023

ரயில் பயணச்சீட்டு சோதனையை அதிகரிக்க அவசர நடவடிக்கை

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதானமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களில் இப்பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று காலத்தில் ரயில் பயணிகளின் பயணச்சீட்டு பரிசோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால், பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மருதானை ரயில் நிலையத்தில் மாத்திரம் பயணச்சீட்டின்றி பயணித்த பயணிகளிடமிருந்து 02 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயணச்சீட்டு பெறாமல் ரயிலில் பயணித்த 72 பயணிகளிடமிருந்தே இந்த அபராதம் அறவிடப்பட்டதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment