இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, September 25, 2023

இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் (270,000) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே தாழ்வுபாடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகளின் தற்போதைய தெரு மதிப்பு 3 கோடி என்பதுடன் போதை மாத்திரை கடத்தலுடன் தொடர்புபட்டதாக தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் - எஸ். றொசேரியன் லெம்பேட்

No comments:

Post a Comment