A/L பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, September 18, 2023

A/L பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானம்

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேற்படி ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘ஜி77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பான முடிவுகள் இறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment