லியோ படத்தின் இசை வெளியீடு வரும் 30ஆம் திகதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே படத்தின் இசை வெளியீடு இந்த மாதம் 30ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு முன்னதாகவே அறிவித்தது. ஆனால் படத்தின் இசை வெளியீடு எங்கு நடக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் காணப்பட்டன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் இசை வெளியீடு வரும் 30ஆம் திகதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மலேசியா, சென்னை, மதுரை, கோவை போன்ற பல இடங்களில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடக்கவுள்ளதாகவும் மிகவும் பிரம்மாண்டமாக இந்த இசை வெளியீடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அரசியலில் ஈடுபட விஜய் தீவிரம் காட்டிவரும் நிலையில் அதிகமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகவும் விஜய் இது குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்திலேயே இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அந்த குட்டி ஸ்டோரி பலருக்கு பதிலடியாக இருக்கும் எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட டிக்கெட்டுகள் வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் படக்குழு மேற்கொண்டுள்ளது.
விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்னும் ஒரே மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தொடர்ந்து 52 நாட்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களிலும் நடத்தப்பட்டது.
இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. அடுத்த மாதம் ஒக்டோபர் 19ஆம் திகதி இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷன்கள் தற்போது துவங்கியுள்ளன.
No comments:
Post a Comment