3 கோடியே 72 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, September 16, 2023

3 கோடியே 72 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்க நகைகளை கடத்த முயன்ற இரு பெண்களை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாக்க விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (15) கைது செய்தனர்.

குறித்த பெண்களிடமிருந்து 3 கோடியே 72 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் 26 வயதான இந்தியப் பிரஜையாவார். மற்றைய பெண் கொழும்பு ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இலங்கை பிரஜையாவார்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment