பயனாளிகளுக்கு அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மேலும் 1,550 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 257,170 பயனாளிகளுக்கான ஜூலை மாதப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று (08) வைப்பிலிடப்பவுள்ளன. மீதமுள்ள பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை, நலன்புரி நன்மைகள் சபை கணக்குகளை சரிபார்த்த பின்னர் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட பின்னர், சகல பயனாளிகளுக்கும் ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகளை ஒரே நேரத்தில் வழங்க முடியும்.
முதற்கட்டமாக 791,000 பயனாளிகளுக்கு 5,016 மில்லியன் ரூபாவும், இரண்டாவது கட்டத்தில், 1,048,170 குடும்பங்களுக்கு 6,566 மில்லியன் ரூபாவும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான ஆய்வுகள் முடிந்தவுடன், சகல பயனாளிகளுக்கும் நிதி வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment