குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு ஒன்லைன் முறை மூலம் நேற்று வரை 50,330 விண்ணப்பப்படிவங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று 10 ஆம் திகதி காலை 08.30 மணி வரை கிடைத்துள்ள 50,330 விண்ணப்பப் படிவங்களில் 41,588 விண்ணப்பங்கள் சாதாரண சேவையின் கீழ் கிடைத்துள்ளன.
இவை அனைத்திலும் ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களாக 26,972 பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 6,405 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களில் குறைகளுடன் விண்ணப்பித்த 14,676 விண்ணப்பங்கள் தொடர்பாக விண்ணப்பதாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தவறுகள் இல்லாமல் ஆவணங்களை மீளவும் அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
விரைவான மூன்று நாள் சேவையின் கீழ் 8,742 விண்ணப்பப்படிவங்கள் கிடைக்க பெற்றுள்ளதுடன் மூன்று நாள் சேவையின் கீழ், கிடைக்கப் பெற்ற 6,521 விண்ணப்பம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment