அரச வைத்தியசாலைகளில் ஏற்ப்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு தீர்வைக்கோரி பொதுமக்களிடம் கை எழுத்துப் பெறும் போராட்டம் ஒன்று வவுனியாவில் வெள்ளிக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், மருந்து தட்டுப்பாட்டினால் அதிகளவான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் கர்ப்பிணித் தாய்மார்களின் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது.
இந்த அரசாங்கத்திடம் நல்ல திட்டங்கள் இல்லை. மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலைமை தொடர்ந்தால் நாட்டு மக்கள் மரணிக்கும் அவலமே ஏற்படும்.
எனவே, மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதுடன், தற்போதைய சுகாதார அமைச்சரை மாற்றி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றனர்.
குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர்களான ரசிக்கா பிரியதர்சினி, கருணாதாச உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment