தேங்காய் திருடிய இராணுவ சிப்பாய் மடக்கிப்பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 18, 2023

தேங்காய் திருடிய இராணுவ சிப்பாய் மடக்கிப்பிடிப்பு

அரச தென்னந்தோப்பில் தேங்காய் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தோட்டக் காவலர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (18) மாதம்பே, ரத்மல்கர என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாய் மாதம்பே பனிரெண்டாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தேங்காய் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் தோட்ட நிர்வாகத்தினரால் பிடிக்கப்பட்டபோது அவரிடமிருந்து திருடப்பட்ட 182 தேங்காய்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்மல்கரவிலுள்ள அரச தென்னந்தோப்பில் தொடர்ச்சியாக தேங்காய் திருட்டு இடம்பெற்று வரும் நிலையில், திருடர்களை கைது செய்ய அதிகாரிகளும் காவலர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment