பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பெல்மடுல்ல - ரில்லேன பகுதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரத்தினபுரி - பலாங்கொடை, பல்லெபெத்த பகுதியை சேர்ந்த 53 மற்றும் 59 வயதான இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் பயணித்த முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதியும் முச்சக்கர வண்டியில் பயணித்தவரும் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பெல்மடுல்ல பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment