சீனாவின் சினோபெக் நிறுவனத்தினால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலாவது எரிபொருள் தொகுதியை தரையிறக்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் இருப்பு தொகுதி நாளையதினம் நாட்டை வந்தடையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோல் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெற்றோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான சினோபெக், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமானது, நாட்டில் எரிபொருள் சில்லறை வர்த்தகத்திற்காக ஜூலை 14ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டது.
No comments:
Post a Comment