தகவல் கோரி மின்சார சபைக்கு கடிதம் அனுப்பினார் நாமல் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 5, 2023

தகவல் கோரி மின்சார சபைக்கு கடிதம் அனுப்பினார் நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் ஒருங்கிணைப்பு செயலாளரினால் இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸவின் திருமணத்தின் போது செலுத்தப்படாத மின் கட்டணம் தொடர்பாக இலங்கை மின்சார சபை வழங்கிய பட்டியல் தொடர்பில் கடிதத்தில் தகவல் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் கடிதம் பகிரப்பட்டு வரும் நிலையில், அவ்வாறானதொரு பட்டியல் மின்சார சபையினால் வழங்கப்பட்டதா என கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அவ்வாறு மின் கட்டணப் பட்டியல் ஒன்று வழங்கப்பட்டிருக்குமாயின், அது யாருடைய பெயருக்கு, எப்போது, எந்த முகவரிக்கு வழங்கப்பட்டது எனவும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த மின் கட்டணப் பட்டியல் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குமாறு அந்த கடிதத்தின் ஊடாக நாமல் ராஜபக்ஸ சார்பில் அவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment